14ம் தேதியுடன் பிரசாரம் ஓய்வு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 10, 2016

14ம் தேதியுடன் பிரசாரம் ஓய்வு !

தமிழகம் முழுவதும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களை ஆதரித்து, தலைவர்கள், கூட்டணி கட்சியினர், குடும்பத்தினர் என, பல தரப்பினரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன் நடந்த தேர்தலில், ஓட்டுப்பதிவு காலை, 7:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நடந்தது. அப்போது, தேர்தல் பிரசாரம், ஓட்டுப்பதிவுக்கு ஒரு நாள் முன்பாக, மாலை 5:00 மணிக்கு நிறைவடைந்தது.

இம்முறை ஓட்டுப்

பதிவு, காலை 7:00 மணி முதல், மாலை 6:00 வரை நடைபெற உள்ளது. எனவே, தேர்தல் பிரசாரம் நிறைவு பெறும் நேரமும் மாறி உள்ளது. வரும் 14ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, பிரசாரம் நிறைவு பெறுகிறது. அதன்பின், யாரும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது.

No comments:

Post a Comment