தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்:மே 18 வரை கால அவகாசம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 8, 2016

தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்:மே 18 வரை கால அவகாசம்

சென்னையில், தேர்தல் பணியில் ஈடுபடும், 36 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான, தபால் ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது. சென்னையில், 3,770 ஓட்டுச்சாவடிகளில், 20 ஆயிரம் அரசு ஊழியர்கள், 16 ஆயிரம் போலீசார் என, 36 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கான, இரண்டாம் கட்ட பயிற்சி, 16 பயிற்சி மையங்களிலும் நடந்து வருகிறது. இப்பயிற்சியில் பங்கேற்கும், தேர்தல் பணி ஊழியர்களுக்கு தபால் ஓட்டு சீட்டு வழங்கப்பட்டது. நேற்று முதல், தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில், ஓட்டுப்பதிவு செய்யாதவர்கள், அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் அறையில் வைக்கப்பட்டுள்ள ஓட்டு பெட்டியில், மே, 18 வரை ஓட்டுகளை பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment