தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, 20.5.2016 முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 22, 2016

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, 20.5.2016 முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கால்நடை மருத்துவம் விண்ணப்பம். 
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இளநிலை படிப்புகளில் சேர, 20.5.2016 முதல், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் எஸ்.திலகர் கூறியதாவது: கால்நடை பல்கலையில், பி.வி.எஸ்.சி., 320 இடங்கள்; பி.டெக் - உணவு தொழில்நுட்பம்; கோழியின தொழில்நுட்பம்; பால்வளத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு, தலா, 20 என, 380 இளநிலை பட்டப்படிப்பு இடங்களுக்கு,மாணவர் சேர்க்கை துவங்குகிறது. 
நாளை முதல், www.tanuvas.ac.in என்ற, பல்கலை இணையதளத்தில், ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை, தகுந்த சான்றிதழ் நகல்களுடன், 'தலைவர், சேர்க்கைக் குழு, இளநிலை பட்டப்படிப்பு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, மாதவரம் பால் பண்ணை,சென்னை - 51' என்ற முகவரிக்கு, ஜூன் 16ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment