58 சதவீத ஓட்டுச்சாவடிகளில் கேமரா: ராஜேஷ் லக்கானி ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 13, 2016

58 சதவீத ஓட்டுச்சாவடிகளில் கேமரா: ராஜேஷ் லக்கானி !

தமிழகத்தில், 58 சதவீத ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவை பதிவு செய்ய, கேமரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் பணம் பட்டுவாடா குறித்து, ஏராளமான புகார்கள் வருகின்றன. அனைவரும்
போன் செய்கின்றனர். அதற்கு பதிலாக, எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் மெயில் போன்றவற்றை அனுப்பலாம். ஏனெனில், போனில் பேசுவோர் அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மற்ற நபர்கள் பேசுவது தடைபடுகிறது.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அவை, 15ம் தேதி காலை வாகனங்களில் ஏற்றப்பட்டு, ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லப்படும். தமிழகத்தில், 66,001 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவற்றில், 26,969 ஓட்டுச் சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்பட்டு, ஓட்டுப்பதிவு இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். 10 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படும். 8,650 ஓட்டுச்சாவடிகளில், மைக்ரோ பார்வையாளர்கள், ஓட்டுப்பதிவை கண்காணிப்பர்.
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதற்காக, மின் தடை ஏற்படுத்தப்படுவது குறித்து, மின் வாரியத்திற்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

No comments:

Post a Comment