எம்.பார்ம்., - எம்.பி.டி., படிப்புக்கு இன்று கலந்தாய்வு.... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 23, 2016

எம்.பார்ம்., - எம்.பி.டி., படிப்புக்கு இன்று கலந்தாய்வு....

ஒத்திவைக்கப்பட்ட, எம்.பார்ம்., - எம்.பி.டி., படிப்புகளுக்கான கலந்தாய்வு, இன்று நடக்கிறது.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உட்பட்ட, அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், எம்.பார்ம்., மற்றும் முதுநிலை இயன்முறை மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டு
இடங்களுக்கான கலந்தாய்வு, மே, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. பின், 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.இதன்படி, இந்த படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று நடக்கிறது. மேலும், விவரங்களை, www.tn.health.org என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ளதாக, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment