பொது மருத்துவ நுழைவுத் தேர்வு: கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 2, 2016

பொது மருத்துவ நுழைவுத் தேர்வு: கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது

பொது மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று முதல் கட்டமாக அந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இத்தேர்வு நடைபெறுகிறது. 39 இடங்களில் நடைபெறும் இத்தேர்வை சுமார் 26,000 பேர் எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேசிய தகுதி காண் தேர்வை (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இன்று நடைபெறும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை தேசிய தகுதி காண் தேர்வின் முதல் கட்டம் என்று கருத்தில் கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக ஜூலை 24-ஆம் தேதி 2-ஆம் கட்ட தேசிய தகுதி காண் தேர்வு நடத்தப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
முதல்கட்டமாக இன்று நடைபெறும் தேர்வு தமிழகத்தில் சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. 39 இடங்களில் நடைபெறும் இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 26,000 மாணவர்கள் எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எவ்வித பொருள்களையும் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் ஷூ அணிந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான சோதனைக்குப் பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment