நுழைவு தேர்வு ரத்து? வருகிறது அவசர சட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 18, 2016

நுழைவு தேர்வு ரத்து? வருகிறது அவசர சட்டம்

தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.'மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேசிய நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்

தீர்ப்பளித்திருந்தது.'மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்' என, பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

இந்த நிலையில், மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளையே இந்த ஆண்டு நடத்தும் வகையிலும், தேசிய அளவிலான தேர்வை, ஓராண்டுக்கு ஒத்திவைக்கும் வகையிலும், அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment