விளையாட்டு விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு, திருப்பூர் மாவட்ட அளவில் 8ம் தேதி நடக்கிறது.
விளையாட்டில் திறன் மிகுந்த மாணவர்களை தேர்வு செய்து, ஊக்கப்படுத்த, 28 விளையாட்டு விடுதிகளை அரசு நடத்துகிறது. ஆண்டுதோறும், 7, 8,9 மற்றும் பிளஸ்1 வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இத்தேர்வு முதற்கட்டமாக மாவட்டம், பின்பு மாநில அளவில் நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நடப்பாண்டு இத்தேர்வு நடத்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. தேர்தலை காரணமாக முன்வைத்து, மாணவர் சேர்க்கைக்கான தேர்வு தாமதப்படுத்தப்பட்டது. மாணவர்கள் பள்ளியில் சேர்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தற்போது மீண்டும் இத்தேர்வு நடத்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 8ம் தேதி காலை, 8:00 மணிக்கு நஞ்சப்பா மேல் நிலைப்பள்ளியில் தேர்வு நடக்கிறது.
ஏற்கனவே விண்ணபித்திருந்த மாணவர்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். 8ம் தேதி பங்கேற்க விரும்பும் மாணவர்கள் முகவரிக்கான அடையாள அட்டை மற்றும் நகல், இரண்டு புகைப்படங்கள், சாதி சான்றிதழ் நகல், மற்றும் விளையாட்டு சான்றிதழ்கள் உள்ளவர்கள் அதை உடன் சமர்பிக்கலாம். அன்றைய தினமே விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தேர்வில் பங்கேற்கலாம் என விளையாட்டுத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment