வறட்சிக்கு தீர்வு: நதிகளை இணைக்கும் திட்டத்தை முன்னெடுக்க இந்திய அரசு முடிவு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, May 17, 2016

வறட்சிக்கு தீர்வு: நதிகளை இணைக்கும் திட்டத்தை முன்னெடுக்க இந்திய அரசு முடிவு !

இந்தியாவில் நிலவும் கடுமையான வறட்சியை போக்க, நதிகளில் இருந்து நீரை தடம் மாற்றி அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டத்தை இந்திய அரசு தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரம்மபுத்திரா மற்றும் கங்கை போன்ற பெரிய நதிகள் உள்பட பல
நதிகளிலிருந்து நீரை வறட்சி பகுதிகளுக்கு திருப்பி விடுவது தான், தற்போது அரசின் முக்கிய முன்னுரிமையாக உள்ளதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதி, பிபிசியிடம் தெரிவித்தார்.
330 மில்லியன் மக்கள் பாதிப்படைந்த மிகவும் மோசமான வறட்சியால் தற்போது இந்தியா அல்லல்படுகிறது.
ஆனால், நதிகளை இணைக்கும் திட்டம் சுற்றுச்சூழல் பேரழிவை உருவாக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment