சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வை மீண்டும் பொதுத்தேர்வாக மாற்று வது குறித்து டெல்லியில் 25-ம் தேதி நடக்கும் மத்திய கல்வி ஆலோசனைக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.மாநில பாடத்திட்டத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகள்பொதுத்தேர்வுகளாக நடத்தப்படு கின்றன.
அதேபோல், மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு தேர்வும், 12-ம் வகுப்பும் தேர்வும் 2010-ம் ஆண்டுவரை பொதுத்தேர்வுகளா கவே நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் 2010 முதல் 10-ம் வகுப்பு தேர்வு மட்டும் கட்டாய பொதுத் தேர்விலிருந்து மாற்றப்பட்டு மாணவர்களின் விருப்பத்துக்கு விடப்பட்டது.அதன்படி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி ஆண்டு இறுதி தேர்வினை பொதுத் தேர்வாகவோ அல்லது பள்ளி அள விலான தேர்வாகவோ எழுதிக் கொள்ளலாம். விருப்ப தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட தால், 10-ம் வகுப்புத் தேர்வை பொதுத்தேர்வாக எழுதும் மாண வர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.10-ம் வகுப்பு தேர்வு கட்டாய பொதுத்தேர்வாக இல்லாததால் மாணவர்கள் அத்தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்ப தில்லை என்றும் இதனால் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும் கல்வி யாளர்கள் மற்றும் பெற்றோர்அமைப்புகளிடமிருந்து மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
மேலும், 10-ம் வகுப்பு தேர்வை பொதுத்தேர்வாக எழு தாத மாணவர்கள் முதன்முறையாக 12-ம் வகுப்பு தேர்வை பொதுத்தேர் வாக எழுதுவதால் அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும் புகார்கள் எழுந்தன.இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்வை முன்பு இருந்ததைப் போல கட்டாய பொதுத்தேர்வாக மாற்ற சிபிஎஸ்இ முடிவுசெய்துள்ளது. எனினும் எந்த ஆண்டு முதல் அதை நடைமுறைப்படுத்துவது என்று இன்னும் முடிவு செய்யப் படவில்லை. 2018-ம் ஆண்டிலி ருந்து அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலை யில், மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் டெல்லியில் வருகிற 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வை மீண்டும் பொதுத்தேர்வாக மாற்று வது குறித்தும், அதை எந்த ஆண் டிலிருந்து நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரி வித்தன.
No comments:
Post a Comment