பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 முதல் அமல்
டெல்லி: ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற விதியை ஜூலை 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. இதே போன்று வங்கி கணக்குகள், கேஸ் இணைப்புகள் என அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 1ம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது.
எனவே, ஜூலை 1ம் தேதிக்கு பிறகு பான் எண்ணிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment