குப்பைகளை தரம்பிரித்து அதனை சரியாகக் கையாளத் தெரியாத நிலையில் 2050-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் குப்பைகளைக் கொட்ட புதுடெல்லி அளவுக்கு பெரிய இடம் தேவைப்படும் என்று தொழிற்துறை கூட்டமைப்பு அசோசேம் தெரிவித்துள்ளது.
இத்தகைய தேவையினால் “இப்பெரும் நிலப்பரப்புகள் வேறு பயன்களுக்கு பயன்படுத்த முடியாத உருப்படியற்ற நிலப்பகுதியாக இருக்கும். 2050-ல் 88 சதுர கிமீ நிலப்பரப்பு அதாவது புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் நிர்வாகத்துக்குக் கீழ் இருக்கும் நிலப்பரப்பு அளவுக்கு குப்பைகளைக் கொட்ட இடம் தேவைப்படும்” என்று இந்தியாவில் கழிவு மேலாண்மை: மாறும் நிலமைகள் என்ற ஆய்வறிக்கையில் அசோசேம் மற்றும் கணக்கியல் நிறுவனமான பிடபிள்யுசி கூறியுள்ளது.
இந்தியாவின் 50% மக்கள் தொகை நகரப்பகுதிகளிலேயே வாழும் நிலை 2050-ல் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் கழிவு உற்பத்தி ஆண்டுக்கு 5% அதிகரிக்கும் என்று கணித்துள்ளது இந்த அறிக்கை.
2021- ம் ஆண்டில் கழிவுகளின் உற்பத்தி 101 மில்லியம் மெட்ரிக் டன்கள் என்றும் 2031-ல் 164 மெட்ரிக் டன்கள் என்றும் 2050-ல் இது 436 மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள் தொகை இருக்கும் முதல் அடுக்கு நகரங்கள் நாட்டின் மொத்த கழிவுகளில் 80% கழிவுகளை உற்பத்தி செய்யும், என்கிறது இந்த அறிக்கை.
No comments:
Post a Comment