"வகுப்பறை கற்றல், கற்பித்தல் சூழலில் ஆசிரியர்கள் மாற்றம் ஏற்படுத்தி, போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும்," என, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.
மதுரையில் இத்திட்டம் சார்பில் ஆறு மாவட்டங்களை சேர்ந்த கணித ஆசிரியர் கருத்தாளர்களுக்கான பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் அமுதா வரவேற்றார்.
இதில் கண்ணப்பன் பேசுகையில், "என்.சி.இ.ஆர்.டி., பாடத்திற்கு இணையானது நமது சமச்சீர் கல்வி முறை பாடத்திட்டம். ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு பயிற்சிகள் மூலம் மாணவர்கள் ஆழப் படிக்கும் முறையை கற்பிக்க முடியும். அப்போது தான் அவர்களால் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும். இதற்காக ஆசிரியர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்," என்றார்.
மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 180 கருத்தாளர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment