நீட் தேர்வுமுடிவு: முதல் 25 இடங்களில் தமிழகம் இடம்பெறவில்லை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 24, 2017

நீட் தேர்வுமுடிவு: முதல் 25 இடங்களில் தமிழகம் இடம்பெறவில்லை

நேற்று (ஜூன் 23) வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவில் முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்களின் பெயர் இடம் பெறவில்லை. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. இதற்கான முடிவு இன்று வெளியிடப்பட்டது. முதல் 25 மாணவர்கள் பட்டியலில் தமிழக மாணவர்கள் பெயர்கள் இடம் பெற வில்லை மேலும் முதல் 25 இடங்களில் பஞ்சாப்-3, ம.பி.,3 குஜராத் -2, உ.பி.,2 தெலுங்கானா-2 கேரளா -2 மாணவர்கள் இடம்பெற்றுளனர்.தர வரிசையில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக இடம் பெற்றுள்ளனர். கல்வியில் பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பீகார்மாநிலத்தை சேர்ந்தவர்கள் முதல் 25 இடங்களில் இடம் பெற்றுளனர்.டாப் 25 மாணவர்களும் மாநிலங்களும்:
1) நவ்தீப்சிங் -பஞ்சாப்
2) அர்ச்சித் குப்தா -ம.பி
3) மணிஷ் முல்சந்தானி -ம.பி
4) சங்கீத் சதானந்தா- கர்நாடகா
5) டோக்ரா அபிஷேக்- வீரேந்திரா மகாராஷ்டிரா
6) டெரிக் ஜோசப் -கேரளா
7)கனீஷ் தயாள் -ஹரியானா
8) நிகிதா கோயல் -பஞ்சாப்
9) ஆர்யன் ராஜ்சிங்- உ.பி.
10) தனீஷ் பன்சால்- பஞ்சாப்
11) நிஷிதா புரோகித் -குஜராத்
12) லக்கிம்சேதி- தெலுங்கானா
13) அனுஜ் குப்தா -ம.பி.
14) நாரெட்டி மன்விதா -ஆந்திரா
15) ஹரிஷ் ஆனந்த் -மே.வங்கம்
16) ஹர்ஸ் அகர்வால் -பீகார்
17) சாவி ஹர்கவத் -ராஜஸ்தான்
18) நடா பாதிமா -கேரளா
19) புவனேஷ் ஷர்மா- உபி
20) வன்ஷிகா அரோரா -டில்லி
21) மரியா பிஜி வர்கீஷ்- கேரளா
22) அதிதி கோயல் -ஹரியானா
23) விஷ்னு சிங்கால் -குஜராத்
24) மன்கானி தீபிகா -தெலுங்கானா
25) அபிநீத் மாத்தூர் -டில்லி

No comments:

Post a Comment