B.Ed படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்: 30-ம் தேதி கடைசி நாள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 23, 2017

B.Ed படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்: 30-ம் தேதி கடைசி நாள்

B.Ed படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்: 30-ம் தேதி கடைசி நாள்
தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், 14அரசு உதவி பெறும் கல்வி யியல் கல்லூரிகளிலும் உள்ள பிஎட் இடங்களில் 1,777 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப் படுகின்றன. 
இதில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 21-ம் தேதி முதல்வழங்கப்பட்டு வருகின்றன.  சென்னையில் லெடி வெலிங் டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை கல்வி யியல் மேம்பாட்டு நிறுவனம் உட்பட 13 கல்வியியல் கல்லூரி களில் வரும் 30-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) விண்ணப் பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்சி,எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். அவர்கள் சாதி சான்றிதழ் நகலை சுயசான்றொப்பமிட்டு இந்த சலுகை கட்டணத்தில் விண் ணப்பங்களைப் பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் ஜூலை 3-ம் தேதிக்குள் ‘செயலர், தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை-2017, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005’ என்ற முக வரிக்கு அனுப்ப வேண்டும். கல் வித்தகுதி, தேர்வுமுறை, வெயிட் டேஜ் மதிப்பெண் உள்ளிட்ட இதர விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment