மெட்ரோ ரயில் முதுநிலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 25, 2017

மெட்ரோ ரயில் முதுநிலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐஐடியில் மெட்ரோ ரயில் தொடர்பாக முதுநிலை பட்டயப் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில்
நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடியில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஓராண்டு முதுநிலை பட்டயப் படிப்பை (பி.ஜி. டிப்ளமோ) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிவில் பொறியியல் பட்டதாரிகள் 70 சதவீத மதிப்பெண் பெற்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வரும் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் தேர்வு அல்லது நேர்முக தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக் கப்பட்டவர்கள் சென்னை ஐஐடியில் ஒரு ஆண்டு காலம் படிக்கலாம். மாதம் ரூ.20 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும். பின்னர், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் அளிக்கப்படும். மாத சம்பளம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். இது தொடர்பாக மேலும், முழுமையான தகவல் பெற www.chennaimetrorail.org. என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment