தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 23, 2017

தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல்

தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.தொடக்க கல்வித் துறை சார்பில் ஒன்று முதல்
எட்டாம் வகுப்பு வரை ஆண்டு செயல்திட்டம் வெளியிடப்பட்டது. இதில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் பணி நாள்கள் 210 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஆக., 5, செப்., 16, அக்., 7 ஆகிய 3 சனிக்கிழமைகளும், ஆண்டுத் தேர்வு முடிந்து ஏப்., 20, ஏப்., 23 முதல் ஏப்., 27, ஏப்., 30 ஆகிய 7 சனிக்கிழமைகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால் கடந்த காலங்களில் பயிற்சிக்காக அளிக்கப்பட்டு வந்த ஈடுசெய் விடுப்பும் ஆசிரியர்களுக்கு ரத்து செய்யப்பட்டது.தொடக்க கல்வித்துறையின் இந்த அறிவிப்பை அனைவருக்கும் கல்வி இயக்கம் ஏற்கவில்லை. தேர்வுக்கு முன்பே பயிற்சிகளை முடிக்க வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஜூன் 24ல் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும், ஜூலை 1ல் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் பயிற்சியில் பங்கேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகளை பிறப்பித்து
வருகின்றனர். இதனால் சிரமப்படுகிறோம் என்றனர்.

No comments:

Post a Comment