உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவி காலம் மேலும் 6 மாதம் நீடிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 24, 2017

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவி காலம் மேலும் 6 மாதம் நீடிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்

சட்டசபையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை ஜூன். 30 முதல் மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

அதில் சட்டசபை தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்காக புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அதில் சரி பார்க்கும் பணி விரைவில் முடிக்கப்படும். வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய துணை வாக்காளர் பட்டியலை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த வழக்கு ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் மனு நிலுவையில் உள்ளதை கருதி மாநில தேர்தல் ஆணையம் கலந்து ஆலோசனை செய்ய வேண்டி இருப்பதால் தனி அதிகாரிகளின் பதவி காலத்துக்கு நீட்டிப்பு செய்ய அரசை கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

தனி அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிப்பு மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment