பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவித்துள்ளது.
வருமான வரி செலுத்துவோர், தங்களது பான் எண்ணுடன்
ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு முன்பு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு நேற்று வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதில் பாண் எண்ணுடன் ஆதார எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. வருமான வரி செலுத்துவோர், தங்களது பான் எண்ணுடன்
2017-18-ம் ஆண்டுக்கான நிதி மசோதாவில் வழியாக வரி தாக்கல் செய்வதில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி திருத்தம் கொண்டு வந்தார். வருமான வரித் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் மற்றும் பல பான் கார்டுகள் வைத்து வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பதற்காக பாண் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது என இரு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி சட்டம் 139ஏஏ (2)-ன் படி, வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் பான் எண் யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ அவர்கள் கட்டாயமாக ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
வரி செலுத்துபவர்களில் இதுவரை 2.07 கோடி ஏற்கெனவே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் இந்தியாவில் 25 கோடி பேர் பான் எண்ணை வைத்துள்ளனர். ஆதார் எண் மொத்தம் 111 கோடி பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணையதளத்தின் மூலமாக இணைப்பதற்கான வசதிகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment