37 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்...தகவல் சேகரிப்பு, துரித உணவு தயாரிப்பு, இயந்திரங்கள் இயக்குதல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 29, 2017

37 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்...தகவல் சேகரிப்பு, துரித உணவு தயாரிப்பு, இயந்திரங்கள் இயக்குதல்

37 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்...
தகவல் சேகரிப்பு, துரித உணவு தயாரிப்பு, இயந்திரங்கள் இயக்குதல்

உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களில் 2030ம் ஆண்டிற்குள் 37.5 கோடி பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்ட மேகின்ஸி குளோபல் இன்ஸ்ட்டியூட், அத்தியாவசிய துறைகளில் இயந்திரங்களின் பங்கு குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்முடிவுகள், உழைக்கும் வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
விரவிவரும் இயந்திரமயம் :
உற்பத்தி திறனை பெருக்கும் நோக்கத்துடனும், மனித உழைப்பின் வீதத்தை பெருமளவில் குறைக்கும் வகையிலும், பல்வேறு நிறுவனங்கள், இயந்திரங்களை நாட ஆரம்பித்துள்ளன. 10 பேர் செய்ய வேண்டிய பணியை, ஒரு இயந்திரம், எவ்வித தடங்கலுமின்றி செவ்வனே செய்வதால், பல்வேறு நிறுவனங்களும் இயந்திரமயமாக்கலின் பக்கம் செல்ல துவங்கியுள்ளன.
அதிர்ச்சி :
உடல் உழைப்பின் மூலம் செய்யப்படும் இயந்திரங்களை இயக்குதல், துரித உணவுகளை தயாரித்தல், தகவல்களை சேகரித்தல் அதை பிராசசிங் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் இயந்திரங்களை உட்படுத்துவதன் மூலம் தயாரிப்பு திறன் பெருமளவு அதிகரிக்கிறது. மனித உழைப்பு பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த துறைகளில் இயந்திரங்களை உட்படுத்தப்படுவதன் மூலம் தொழிலாளர்கள் பெருமளவில் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேகின்ஸி நடத்திய ஆய்வில், பல்வேறு துறைகளில் இயந்திரங்களின் ஆதிக்கம் அதிகமாகிவரும் நிலையில், 2030ம் ஆண்டிற்குள், சர்வதேச அளவில் 37.5 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980களில், கம்ப்யூட்டர்களின் வரவால், பலருக்கு வேலை பறிபோன நிலையில், கம்ப்யூட்டர் தொடர்பான திறன் பெற்றவர்களுக்கு பல்வேறு இடங்களில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது போன்று, தொழில்நுட்ப திறன் படைத்தவர்களுக்கு எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment