காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு: தாம்பரத்தில் போலீஸார் விளக்கினர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 23, 2017

காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு: தாம்பரத்தில் போலீஸார் விளக்கினர்

தாம்பரம் காவல் நிலையத்தில் போலீஸார் பணிகள் குறித்து
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தாம்பரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காவல் நிலைய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதற்கு தாம்பரம் உதவி ஆணையர் தி.ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் காவல் துறை மீதான பள்ளி மாணவர்களின் அச்சத்தை போக்குவது, புகார் பதிவு செய்து அதற்கான ரசீது வழங்குவது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, கைது செய்வது மற்றும் காவல் துறையினரின் நீதிமன்ற நடவடிக்கைகள், போலீஸார் வயர்லெஸ் மூலம் தகவல்களை தெரிவிப்பது குறித்து விளக்கப்பட்டன.
அப்போது மாணவர்கள் எப்ஐஆர் குறித்தும் துப்பாக்கியால் சுடுவது பற்றியும் ஆர்வமாக கேட்டனர். இதற்கு போலீஸாரும் பொறுமையாக பதில் கூறினர். துப்பாக்கியை எடுத்துக்காட்டி அதில் சுடுவது குறித்தும், குண்டை எந்த வழியாக போடுவது என்பது குறித்தும் விளக்கி கூறினர்.
மேலும் விபத்து நேரங்களில் மாணவர்கள் செயல்பட வேண்டிய முறைகள், பள்ளி மற்றும் மாணவர்களின் குடியிருப்பு பகுதிகளில் குற்றச் செயல் புரிவோர் குறித்த எச்சரிக்கைகள், அது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 2 பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment