வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: கடலோர மாவட்டங்களில்
கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நேற்று தென் இலங்கை மற்றும் தென் மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று பலவீனமடைந்து தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக அரபிக்கடல் பகுதியில் உள்ளது.
மேலும், தென்மேற்கு வங்க கடல் மற்றும் ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் இடைவெளி விட்டு மித மழையும் சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 14 செ.மீ. மழையும், செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ. சென்னை விமான நிலையம் 10 செ.மீ., காஞ்சிபுரம் 9 செ.மீ., வேதாரண்யத்தில் 9 செ.மீ. மழையும் பெய்துள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment