TNPSC - குரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு
குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசுத் துறைகளில், குரூப் - 2 பதவியில் காலியாக உள்ள, 1,094 இடங்களை நிரப்ப, 2016 ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 509 பேருக்கு, டிச., 7முதல், 11 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அதேபோல், இந்து அறநிலையத்துறை செயல் அதிகாரி பணியில்,49 இடங்களுக்கு, இந்த ஆண்டு, ஜூனில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 65 பேருக்கு, டிச., 12ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன
No comments:
Post a Comment