பள்ளிகளில் புகார் பெட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 28, 2017

பள்ளிகளில் புகார் பெட்டி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
50 லட்சம் : தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 90 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

பல பள்ளிகளில், ஆசிரியர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை; பாடம் நடத்துவதில்லை; கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை; ஆசிரியர் - மாணவர் மோதல் என, பல புகார்கள் உள்ளன.இவை குறித்து, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவான, எஸ்.எம்.சி., ஆகியவை, ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும், ஆய்வுகள் நடத்தி, தீர்வு காண்பதில்லை.
உத்தரவு : அதனால் ஆசிரியர்களுக்கு, மாணவர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், தீர்வு காண்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயன்படுத்தும் வகையில், புகார் பெட்டி வைக்கவேண்டும் என்ற விதியை, தலைமை ஆசிரியர்கள் பின்பற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.நடவடிக்கை : புகார் பெட்டிகளை உடனடியாக அமைத்து, அதில்வரும் புகார்களை, எந்தவித பாரபட்சமும் இன்றி விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பின், அது தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்கு, அறிக்கை அளிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment