ஆன்லைன் மோசடி: இந்தியாவுக்கு நான்காவது இடம்!
டிஜிட்டல்மயமாவது நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோலாக இருந்தாலும், அது ஆன்லைன் திருட்டுகளுக்கும், மோசடிகளுக்கும் சாதகமாக அமைந்துவிடுகிறது. ஆன்லைன் மோசடியில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.
உலகத் தகவல் சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய அளவில் ஆன்லைன் மோசடிகளில் இந்தியா நான்காவது இடம் பிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஆசியாவில் மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக அளவில் ஆன்லைன் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் பேங்கிங் வசதி ஆகியவற்றின் பயன்பாடு இந்தியாவில்தான் அதிகம் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மற்ற துறைகளைக் காட்டிலும் சில்லறை விற்பனையாளர்கள் தான் அதிக அளவில் மோசடிக்கு உள்ளாகின்றனர். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நுகர்வோரிடத்தில் விழிப்புணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் ஆன்லைன் மோசடி மூலம் நிறைய நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக 67 சதவிகித மக்கள் பிரபலமான நிறுவனத்திடமிருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறும் வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது
No comments:
Post a Comment