உயர் கல்வி படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடம் ஒதுக்க உயர் கல்வித்துறை முடிவு.
உயர் கல்வி படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது மாற்றுத்
திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடம் ஒதுக்க உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையம்ஆகியவை இணைந்து சென்னையில் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தின. இந்த கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் அருண்ராய் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், உயர் கல்வித்துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி உயர்கல்வி சேர்க்கையில் 5 சதவீத இடங்கள் நடப்பு கல்வி ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு வரும் கல்வி ஆண்டில் உயர் கல்வி சேர்க்கையின் போது மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment