பொங்கல் பரிசு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ப - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 29, 2017

பொங்கல் பரிசு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ப

ொங்கல் திருநாளை முன்னிட்டு ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு பரிசுதொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை அடங்கிய பரிசுதொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளுக்கு முன்பே நியாய விலைக்கடைகளில் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பால் ரூ.1.84 கோடி குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என்றும், முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment