இப்படியும் ஒரு AEEO !!!
அசத்தும் அரசு அலுவலர் தான் பணி புரியும் இடம் ஒரு கோவில்!!அந்த கோவிலை சொந்த செலவில் புதுப்பித்த, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்!
வேலூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில், நெடுங்காலமாக பராமரிப்பின்றி இருந்த மாதனூர் உதவித் தொடக்க கல்வி அலுவலகத்தை, கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர், திரு.மாதேஷ் அவர்களின் சீரிய முயற்சியால் தன் சொந்த பணம் ரூபாய்,22,000/- செலவு செய்து அலுவலகத்தை மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு முன்மாதிரி அலுவலகமாக மாற்றி அமைத்து உள்ளார்...
தமிழகத்தின் பெருவாரியான ஒன்றியங்களில் 7 வது ஊதிய குழுவின் புதிய ஊதியத்தை பெற இன்று வரை போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் டிசம்பர் 1 ம் தேதி அன்று மாதனுர் ஒன்றியத்தில் புதிய ஊதியம் மற்றும் நிலுவை தொகையையை பெற்று தந்து ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்
அவரது கடமை உணர்வுக்கும் அற்பணிப்புக்கும், மாதனூர் ஒன்றிய ஆசிரியர்களின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்!!
வாழ்த்துக்களை பகிர
திரு, கோ.மாதேஷ், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்.
📱8110077554
No comments:
Post a Comment