முதுகலை பட்டம் பெற்று, சாதனை படைத்ததுடன், முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, நாலந்தா திறந்தநிலை பல்கலையின் பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. மேகாலயா கவர்னர், கங்கா பிரசாத், 2,780 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில், 98 வயது ராஜ்குமார் வைஷ், அனைவரது பாராட்டையும் வென்றார். எம்.ஏ., பொருளாதாரம் முடித்த அவர், மேடையேறி, பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1938ல், ஆக்ரா பல்கலையில், பி.ஏ., பொருளாதாரம் படித்த அவர், 1940ல்,எல்.எல்.பி., முடித்தார்.
ஒரு தனியார் நிறுவனத்தின் சட்ட அதிகாரியாக பணியாற்றி, 1980களில் ஓய்வு பெற்றார். எம்.ஏ., பொருளாதாரம் படிப்பதற்காக, நாலந்தா திறந்த நிலை பல்கலையில், 2015ல் பதிவு செய்திருந்தார்.''என் நீண்ட நாள் கனவு நனவானது. வேலைக்கு செல்வதற்காக மட்டும் படிக்காமல், அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் படிக்க வேண்டும்,'' என, வைஷ் கூறினார்.நாலந்தா பல்கலையில், மிக அதிக வயதில், முதுகலை பட்டம் வென்றவர் என்ற சாதனையை, அவர் புரிந்துள்ளார்
No comments:
Post a Comment