கல்விக்கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்டுங்கள்' - தனியார் பள்ளிகளுக்கு செக் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 21, 2018

கல்விக்கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்டுங்கள்' - தனியார் பள்ளிகளுக்கு செக்

''தனியார் பள்ளிகளில் வாங்கும் கட்டணத்தைச் சீரமைத்து, அவற்றை அறிவிப்புப் பலகைகளில் ஒட்ட வேண்டும்'' எனத் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை தொடங்கிவிட்டது. தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கிராமப்புறங்களில் இருக்கும் தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்கள் படிப்பதற்காக இதுவரை 1,32,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றைப் பரிசீலனைசெய்து, தகுதியான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்க அனுமதிக்கப்படுவர். அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் விதிக்கப்படும் சேர்க்கைக் கட்டணத்தைச் சீரமைத்து, அதை அந்தந்தப் பள்ளிகளில் உள்ள அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் சுகாதாரம் குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்யவும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று, அனைத்து விதமான ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவர்களுடன் மேல்நிலைப் பள்ளி கல்வி அலுவலர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். ஓர் அலுவலர், வருடத்துக்கு இரண்டு முறை ஒரு பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்த முடியும். பிறகு, கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் கருத்துகள்மூலம் அந்தந்தப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். 1, 6, 9, மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த வருடத்திலிருந்து வாரத்துக்கு 4 சீருடைகள் என நான்கு நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜூன் 1-ம் தேதி முதல் மாணவர்கள் 4 விதமான சீருடைகளை அணிந்து வந்தால், மொத்த தமிழகமே திரும்பிப்பார்க்கும்” என்று கூறினார்.

No comments:

Post a Comment