அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடம்: பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 21, 2018

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடம்: பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்யக் கோரிய மனுவுக்குப் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த கருப்பையா தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 6 ஆயிரத்து 81 மேல்நிலைப் பள்ளிகள், 5 ஆயிரத்து 803 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெறுவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரம், ஏராளமான அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, பள்ளிக் கல்வித் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment