பெற்றோருக்கு காத்திருக்கும் பேர் அதிர்ச்சி! தமிழக அரசு அதிரடி! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 21, 2018

பெற்றோருக்கு காத்திருக்கும் பேர் அதிர்ச்சி! தமிழக அரசு அதிரடி!

வரும் கல்வியாண்டு முதல் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களின் விலையை 20% உயர்த்த தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம் முடிவு செய்துள்ளது. மற்ற வகுப்பு படப்புத்தகங்களின் விலை அடுத்த கல்வி ஆண்டு முதல் உயர்த்தப்படும் என தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம் முடிவு செய்துள்ளது.
தரமான தாளில் பாடப்புத்தகங்களை அச்சிடுவதாலும், அதிக அளவில் வண்ணப்படங்களை சேர்ப்பதிலும், பாடப்புத்தகத்தின் முதல் பக்க அட்டை, பின் பக்க அட்டைகள் சேதம் அடையாமல் இருக்க லெமினேஷன் செய்து தருவதாலும் தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளது. இதனால் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த விலை உயர்வு அரசுப்பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் அவர்களுக்கு வழக்கம் போல் விலையில்லா பாட புத்தகங்களை தமிழக அரசு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் 1-ம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. அப்போது 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment