தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு..! தமிழக அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி..!! இனி யாரும்... எதுவும் சொல்ல முடியாது..!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, May 21, 2018

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு..! தமிழக அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி..!! இனி யாரும்... எதுவும் சொல்ல முடியாது..!!!

தற்போது கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் தமிழக பள்ளி மாணவர்களுக்கு, இன்னும் 12 நாட்களில் கோடை விடுமுறை முடிய போகிறதே என்ற கவலை தொற்றியுள்ளது. அதே சமயத்தில் கோடை விடுமுறை முடியப்போகும் மகிழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளனர்.
வரும் ஜூன் 1 தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்க உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு, ''பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம்''. பஸ் பாஸ் தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக, இலவச பஸ் பாஸ் இல்லாத பள்ளி மாணவர்களை அரசு பேருந்தில் பயணம் செய்ய நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை பலதரப்பினரும் முன் வைத்தனர்.
இந்நிலையில், நேற்று கும்மிடிபூண்டியில் உள்ள அதநவீன சோதனை சாவடியை ஆய்வு செய்யவந்த போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்கடிம் கூறியதாவது, ''தமிழக பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்தாலே போதும், பாஸ் இருக்க வேண்டிய கட்டாயமில்லை, அவர்கள் பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரின் இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

No comments:

Post a Comment