பாட புத்தகத்தில் தவறு 13 பேருக்கு, 'நோட்டீஸ்'
பாட புத்தகத்தில், தமிழ் மொழி தோன்றிய ஆண்டை தவறாக
குறிப்பிட்ட விவகாரத்தில், 13 பேர் விளக்கம் அளிக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட விவகாரத்தில், 13 பேர் விளக்கம் அளிக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கு, இந்த ஆண்டு புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆங்கில பாட புத்தகத்தில், ஐந்தாம் பாடமாக, தமிழ் செம்மொழி குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. அதில், தமிழ் மொழி, கி.மு., 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகவும், சமஸ்கிருதம், கி.மு., 2,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தவறான தகவல்களை மாற்ற, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பாடங்களை வடிவமைத்த கமிட்டியில் இடம் பெற்ற ஆசிரியர்கள், பிழை திருத்துனர் உட்பட, 13 பேர் விளக்கம் அளிக்கும்படி, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், பழனிசாமி உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment