மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது
படியில் தொங்குவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி த.விஜயலட்சுமி மாணவர்களிடம் பேசியதாவது: மாணவர்கள் பள்ளியின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.பள்ளிக்கு மாணவர்கள் தாமதமாக வருவதை தவிர்க்க வேண்டும்.மாணவர்கள் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1,பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சிபெற வேண்டும்.அதற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும் .மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது படியில் தொங்குவதை தவிர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் லேனா விலக்கு மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற புதிய பாடநூல் சார்ந்த பயிற்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:ஆசிரியர்கள் பயிற்சியில் பெற்றவைகளை பள்ளியில் கொண்டு சேர்க்க வேண்டும்.பயிற்சியின் போது பாட சார்ந்த கூடுதல் விவரங்களை மற்ற ஆசிரியர்களோடு கலந்தலோசித்து பெற வேண்டும்.ஆசிரியர்கள் புத்தகம் தாண்டி அதிக விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.வகுப்பறையில் பாடம் நடத்த செல்லும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களோடு தயார்நிலையில் செல்ல வேண்டும்.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்கள் புரியும் வகையில் நடத்த வேண்டும் . மேலும் நூறு சதவீத தேர்ச்சியை கொடுக்க கூடிய ஆசிரியராக இருக்க வேண்டும் என்றார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் பழனிவேல் பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினார்.
பயிற்சியில் கறம்பக்குடி,அரிமளம்,திருமயம் ஒன்றியத்தில் பணிபுரியும் 10 ஆம் வகுப்பு அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் கருத்தாளர்களாக மு.பூமிநாதன்,வி.கோவிந்தராஜன்,ஆர்.செந்தில்குமார்,பி.வசந்தகுமார்,வி.கோவிந்தராஜன் ஆகியோர் செயல்பட்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன்,மைய ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி ஆகியோர் செய்திருந்தனர்.
இதே போல் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி கைக்குறிச்சி வெங்கடேஷ்வரா கல்வியில் கல்லூரியில் நடைபெற்றது.அதனையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
No comments:
Post a Comment