பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.10.19 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 22, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.10.19

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.10.19
திருக்குறள்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
விளக்கம்:
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.
பழமொழி
Hunger breaks  stone walls.
 பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.
2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.
பொன்மொழி
வெளியே செல்லவழி இருக்கிறது என்றாலும், வலையில் சிக்கிய மீன் துன்பப்படும், அதுபோல் ஆயிரம் நல்வழி இருந்தாலும் மாயையில் சிக்கித் தவிப்பது மனித குணம்...
----- ராமகிருஷ்ண பரமஹம்சர்
பொது அறிவு
1.குளிர்ச்சியான பொருள்கள் உடலின் எந்த உறுப்பை பாதிக்கும்?
 மண்ணீரல்.
2. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் எடை எவ்வளவு ?
 பிறக்கும் போது குழந்தையின் மூளையின் எடை சுமார் 350 கிராம்.
English words & meanings
* Neurology - study of medicines about human nervous system
நரம்பு மண்டலம் சார்ந்த ஆய்வு மற்றும் படிப்பு.
* Nerve - bundle of fibres which transmit all senses of the body
உணர்வுகளை கடத்தும் இழைகளின் தொகுதி. நரம்பு.
ஆரோக்ய வாழ்வு
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
Some important  abbreviations for students
ed. - edition.
est. - established
நீதிக்கதை
துணிச்சலான சிறுவன்
ஒரு ஊரில், சிறுவன் ஒருவன் மிகவும் சுட்டித்தனமாக இருந்தான். ஒரு நாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஆபத்தான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.
அவர்கள் வந்ததும், இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. அதனால் கீழேயே விளையாடுங்கள் என்று பயமுறுத்தினார். இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். ஆனால், சுட்டிப் பையன் சரி சரி என்று தலையை ஆட்டிவிட்டு, மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.
அவனது நண்பர்கள், ஏறாதே பேய் உன்னை அடித்துவிடும் என்று கத்தினார்கள். இந்த மரத்திலே பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அவேண்டும்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா நம்மைப் பயமுறுத்தியிருக்கிறார். என்று கூறினான்.
அதற்கு மற்ற சிறுவர்கள் உன் தாத்தா சொன்னபோது சரி என்று சொன்னாய் அது ஏன்? என்று கேட்டனர். எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன். என்று நண்பர்களிடம் கூறிக்கோண்டே மரத்தில் ஏறினான்.
நீதி :
தைரியத்துடன் இருத்தல் வேண்டும்.
புதன்
கணிதம் & கையெழுத்து
பெட்டிக்குள் என்ன உள்ளது??
ஒரு பெட்டியில் சில  பேனாக்கள் உள்ளது.
அவை நீலம் ,பச்சை,சிவப்பு நிறமுடைவை...
இவற்றில் ஏதாவது ஒரு நிறப் பேனாக்களை எடுத்தால் 2 மீதியாக வருகிறது....எனில்
கேள்வி:
1) ஒவ்வொரு நிறத்திலும் எத்தனைப் பேனாக்கள் உள்ளன?
2) பெட்டியில் மொத்தம் எத்தனைப் பேனாக்கள் உள்ளன??
விடை:
1) நீலம் - 1
   பச்சை -1
  சிவப்பு -1
2) மொத்தம் -3
இன்றைய செய்திகள்
23.10.19

* 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
*அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.3 ரி‌க்ட‌ர் பதிவானது.
* சீன பட்டாசு விற்பனை செய்வதை பார்த்தாலே பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். சீன பட்டாசு வாங்குவோர், விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
* உலக காது கேளாதோர் டென்னிஸ் போட்டி துருக்கி நாட்டின் அன்டால்யா நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சென்னை அடையாறைச் சேர்ந்த பிரித்வி சேகர் சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
* ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  இன்று இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்றது.  இதன்மூலம்  இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
Today's Headlines
🌸Allotment of extra time to write public examination for classes 10,11,12 - School Notification.
 🌸Moderate earthquake in Andaman and Nicobar Islands in 4.3 Richter
 🌸 The public can complain about the sales of Chinese crackers.  The Department of Health has warned fir severe action against Chinese crackers buyer and sellers.
 🌸 The World Deaf Tennis Tournament was held in Antalya, Turkey.  In the singles, Prithvi Shekhar of Adayar, Chennai, won the singles title and made Tamil Nadu proud.
 🌸 India beat South Africa by an innings and 202 runs in the Ranchi Test today.  The Indian team won the series 3 - 0.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment