Flash News : 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 22, 2019

Flash News : 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Flash News : 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிக்கப்படுகிறது.தேர்வு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணிநேரத்தில் கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்த கல்வி ஆண்டு முதலே இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுவதால் நடவடிக்கை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
புதிய பாடத் திட்டத்தின் கீழ் இந்தாண்டு பொதுத் தேர்வுகள்
கடந்த ஜுலை மாதம், 2019-2020ம் கல்வி ஆண்டில், மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள  10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை[பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டது.அதன்படி பத்தாம் வகுப்புக்கு அடுத்த வருடம் மார்ச் 17ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. பின்னர், 11ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் அறிவியல், வணிகம், உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. இதே போல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 2ம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 2, 5 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வும், அதைத் தொடர்ந்து பிற பாடங்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது.
கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும்
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை உருவாக்கியுள்ள புதிய பாடத் திட்டத்தின் கீழ் இந்தாண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தற்போது 2.30 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நேரம் போதுமானதாக இல்லையென மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.  அத்துடன் தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment