School Morning Prayer Activities -25-10-2019 காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 24, 2019

School Morning Prayer Activities -25-10-2019 காலைவழிபாட்டுச் செயல்பாடுகள்

School Morning Prayer Activities -25-10-2019
காலைவழிபாட்டுச்  செயல்பாடுகள்
25-10-2019
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றையதிருக்குறள்
குறள்எண்-242

  நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
 தேரினும் அஃதே துணை.

மு.வ உரை:

நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.

கருணாநிதி  உரை:

பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலி ஆகிறான். ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமை கொள்ளும் தருணத்தில் முட்டாள் ஆகிறான்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்

உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது.

விளக்கம் :

சோற்று உலையை அனல் குறைவாக வைத்து மூடி போட்டு வெளியில் பொங்கி வராமல் அதனை சமைத்துவிடலாம். ஆனால் நம்மைப் பற்றிய ஒரு ரகசியத்தை ஒருவரிடம் கூறினால் அவர் அதனை பத்து பேரிடமாவது கூறினால்தான் அவருக்கு தூக்கம் வரும். அந்த பத்து பேர் மேலும் பலரிடம் கூறுவர். இப்படியாக ஊர் முழுக்க அந்த விஷயத்தைப் பற்றிதான் பேசுவார்கள். அதனை தடுத்து உங்கள் ரகசியத்தைக் காக்க முடியுமா? ஊர் வாயை மூட முடியாது. இதுவே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words

1.Play ground -விளையாட்டு மைதானம்
2. Referee - நடுவர்
3.Parade - அணிவகுப்பு
4. Volley ball - கைப்பந்து

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. ஏழைகளின் ஊட்டி எது?

ஏற்காடு

2.ஆயிரம் ஏரிகள் உள்ள நாடு எது?

பின்லாந்து

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

 1.குண்டு முழி ராஜாவுக்குக் குடல் எல்லாம் பற்கள். அது என்ன?

 மாதுளை

2. கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது. அது என்ன?

 கரும்பு
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

சாம்பல் பூசணி

🍑 சாம்பல் பூசணி கொடிவகை காய்கறிகளில் ஒன்று.

🍑 பூசணிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோவும், தென் அமெரிக்காவாகும்.

🍑 பறங்கிக்காய் போன்ற தோற்றத்தில் சாம்பல் நிறத்தில் காணப்படுவது சாம்பல் பூசணி ஆகும்.

🍑கோடைக்காலத்தில் உடலில் உண்டாகும் வெப்பத்தினை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப்பூசணி என்றும் அழைப்பார்கள்.

👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை

புகையிலை

புகையிலை போடும் பழக்கம் பீர்பாலுக்கு இருந்தது. மன்னர் எவ்வளவு சொல்லியும் பீர்பாலினால் புகையிலை பழக்கத்தை விட முடியவில்லை. மூத்த அமைச்சர் ஒருவருக்கு, பீர்பால் புகையிலை போடுவது சுத்தமாக பிடிக்கவில்லை. இதற்காக சந்தர்ப்பம் பார்த்து, பீர்பாலை அவமானப் படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தார்.

அந்த நாளும் வந்தது. மன்னரும், மூத்த அமைச்சரும் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவியவாறு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், மூத்த அமைச்சர் அந்த அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் ஒரு புகையிலைச் செடி தானாக முளைத்து இருப்பதைப் பார்த்தார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த கழுதை ஒன்று, புகையிலை சாப்பிட எண்ணி இலையில் வாயை வைத்தது. அதன் காரமும், மணமும் பிடிக்காமல் உண்ணாமல் சென்று விட்டது.

உடனே மூத்த அமைச்சர் சிரித்துக் கொண்டே பாருங்கள் மன்னா! பீர்பாலுக்கு பிடித்த இந்த புகையிலை கேவலம் ஒரு கழுதைக்குக்கூட பிடிக்கவில்லை என்றார்.

உடனே பீர்பால் சிரித்துக் கொண்டே, புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள். ஆனால் கழுதைக்குத்தான் புகையிலையைப் பிடிப்பதில்லை! என்றார்.

பீர்பால் தனது வாக்கு வன்மையால் அந்த மூத்த அமைச்சரின் மூக்கை உடைத்தார்.

நீதி :
ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கும் பிடிக்க வேண்டும் என்றுக் கட்டாயம் ஒன்றும் இல்லை.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.

🔮தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.

🔮வங்காளதேசத்துக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு.

🔮தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உட்பட நான்கு இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி.

🔮சென்னைசென்னையில் தீபாவளியை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கள் 50%கட்டண சலுகை : மெட்ரோ ரயில் நிர்வாகம்.

🔮ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச பாரா ஒலிம்பிக் சைக்கிள் போட்டியில் வெண்கலம் வென்ற மதுரை மாணவர்  .

🔮கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு: நினைத்து பார்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி.

HEADLINES
🔮 Kartarpur do's and don'ts issued, Pilgrims can carry 7-kg baggage, Rs 11,000 in hand.

🔮Thirumalai Nayakkar Mahal to don a fresh look soon.

🔮Government buses bound for Koyambedu will halt at the following places and then will be let inside the CMBT.

🔮India tour back on track after Bangladesh players call off strike.

🔮Defence officials to meet envoys of 40 nations for DefExpo.
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪

No comments:

Post a Comment