பள்ளிகளில் சம்ஸ்கிருதத்தை 3-வது மொழியாக அறிமுகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, November 29, 2014

பள்ளிகளில் சம்ஸ்கிருதத்தை 3-வது மொழியாக அறிமுகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளிகளில் சம்ஸ்கிருதத்தை 3-வது மொழியாக அறிமுகப்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்வியாண்டின் நடுவே சம்ஸ் கிருதம் அறிமுகப்படுத்தப்பட்டால் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

எனவே இந்த கல்வியாண்டு முடியும் வரை சம்ஸ்கிருதத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசால் நடத்தப்படும் சுமார் 1000 கேந்திர வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 3-வது மொழியாக ஜெர்மன் மொழி இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு ஜெர்மன் மொழிக்கு பதிலாக சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படும் என அறிவித்தது. கல்வியாண்டின் நடுவே இதனை மத்திய அரசு அறிவித் ததால் பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மத்திய அரசு பள்ளிகளில் படிக் கும் 20 மாணவர்களின் பெற்றோர் இணைந்து இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கல்வி யாண்டின் நடுவே புதிய மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர் களுக்கு கடினமாக இருக்கும். சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் வரை இதனால் பாதிக்கப்படுவார்கள். இந்த கல்வியாண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைய இருக் கிறது. இந்த சூழ்நிலையில் புதிதாக சம்ஸ்கிருதத்தை படித்து தேர்வு எழுதுவது கடினம். எனவே அடுத்த கல்வியாண்டில் சம்ஸ்கிருத்தை அறிமுகப்படுத்தலாம் அல்லது இந்த ஆண்டில் ஒரு விருப்ப மொழியாக வேண்டுமென்றால் சம்ஸ்கிருதத்தை வைத்துக் கொள்ளலாம். ஏற்கெனவே சம்ஸ்கிருதம் தெரிந்த மாணவர்கள் அதில் தேர்வு எழுதலாம். ஜெர்மன் மொழியே 3-வது மொழியாக தொடர வேண்டும் என்று உத்தர விட்டது. இந்த வழக்கை நீதிபதி அனில் தேவ் தலைமையிலான உச்ச நீதி மன்ற அமர்வு விசாரித்தது. தனிப்பட்ட முறையில் தனது கருத்தை பதிவு செய்த நீதிபதி அனில் தேவ், எனது ஆதரவு சம்ஸ்கிருதத்துக்குதான். நமது மொழிகளுக்கு எல்லாம் தாய் சம்ஸ்கிருதம். ஆனால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றே இந்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment