நெல் உயர நீர் உயரட்டும் (ஆசிரியர் பணி) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 25, 2014

நெல் உயர நீர் உயரட்டும் (ஆசிரியர் பணி)

பலரும் பல வேலைகளுக்குப் போகிறார்கள். வேலை பார்க் கிறார்கள். மாதாமாதம் சம்பளம் வருகிறது. நிரந்தர வரு வாய்க்கு உத்தரவாதத்துடன் அவர்கள் காலம் ஓடுகிறது. ஆனால் கல்வித் துறையில் வேலை பார்ப்போரின் உலகம் இப்படிப்பட்டதல்ல.
அவர்கள் ஒவ்வொரு நாளும் இளையர்களுக்குப் பல துறை அறிவைப் புகட்டுகிறார்கள். நீதிநெறிகளைப் போதிக்கிறார்கள். நீதிநெறிக்கல்வியுடன் கூடிய, தானா கவே தன்னம்பிக்கை வளர்கின்ற, தேர்ச்சி, ஆற்றலைத் திறம்படக் கொண்டுள்ள, அறிவுமிக்க, வருங்காலத்துக்குப் பொருத்தமான எதிர்காலத் தலைமுறையை வளர்க்கப் பள்ளிக்கூடத்தில் அன்றாடம் ஆசிரியர்கள் உரம் போடுகிறார்கள். மாணவர்கள் தங்களைத் தாங்களே உணரவும் தங்கள் முழு ஆற்றலை வெளிக்கொணரவும் உதவக்கூடிய ஒரு சூழலைப் பள்ளிக்கூடத்தில் உருவாக்கும் ஆசிரியர்களின் பணி, மற்ற வேலைகளி லிருந்து வேறுபட்டது.
அத்தகைய ஆசிரியர்களுக்குத் தங்கள் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி தொண்டாற்ற எல்லா வாய்ப்பு வசதிகளும் கிடைக்க வேண்டும், இருக்க வேண்டும். இதைச் சாதிக்கப்போவதாக கல்வி அமைச்சர் ஹெங் சுவீ கியட் சில நாட்களுக்கு முன் கல்வி அமைச்சின் பணித்திட்ட ஆய்வரங்கில் அறிவித்தார்.
சிங்கப்பூரில் புனிதமான ஆசிரியர் தொழிலில் 33,000 பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள். இவர்களில் 1,700 பேர் மூத்த ஆசிரியர்கள். 100 பேர் தலைமை வகிக்கும் ஆசிரி யர்கள். 51 பேர் முதன்மை ஆசிரியர்களாகப் பணியாற்று கிறார்கள். தலைமை முதன்மை ஆசிரியர்கள் ஐந்து பேர் இருக்கிறார்கள்.
காலம் ஓடுகிறது. மாணவர்களின் தனித்தன்மைகள் மாறி வருகின்றன. ஆசிரியர்கள் நாளுக்கு நாள் நவீன மடைந்து வருகின்ற உலகத்துடன் ஒட்ட ஒழுகும் வகையில் தேர்ச்சிகளை, திறமைகளைப் புதுப்புது அறிவைப் பெறு வதற்கான பயிற்சி, ஆதரவு, மதியுரை ஆலோசனை, வழிகாட்டல் எல்லாவற்றையும் பெற அரசாங்கம் பல நடவடிக்கைகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமலாக்க இருக்கிறது.

No comments:

Post a Comment