சர்ச்சைக்குரிய உயர் கல்வி மசோதா வாபஸ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 26, 2014

சர்ச்சைக்குரிய உயர் கல்வி மசோதா வாபஸ்

கடந்த 2011-ம் ஆண்டு டெல்லி மேல்-சபையில், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதாவை அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில் சிபல் தாக்கல் செய்தார். உயர் கல்வியை நிர்வகிக்கும் அமைப்புகளான யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., என்.சி.டி.இ. போன்றவற்றை கலைத்து விட்டு, அவற்றுக்கு பதிலாக, தேசிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆணையம் அமைக்க இம்மசோதா வகை செய்கிறது.
ஆனால், இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பாராளுமன்ற நிலைக்குழுவும் ஆட்சேபனை தெரிவித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அம்மசோதாவை வாபஸ் பெற மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, நேற்று டெல்லி மேல்-சபையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி வாபஸ் பெற்றார்.

No comments:

Post a Comment