ஜனாதிபதிக்கு தினமும் கடிதம்: தமிழக இளைஞர் அயராத முயற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, November 25, 2014

ஜனாதிபதிக்கு தினமும் கடிதம்: தமிழக இளைஞர் அயராத முயற்சி


புனே : 'பெண்கள், குழந்தைகளை பாலியல் பலாத்காரத்திலிருந்து காப்பாற்ற தேவையான சட்டங்கள் இயற்றுங்கள்' என, புனே நகரைச் சேர்ந்த தமிழர் இளைஞர், பண்டிதர் சிவகுமார் பெருமாள் என்பவர், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு, கடந்த, ஏழு மாதங்களாக, தினமும் கடிதம் எழுதி வருகிறார். 
நாடு முழுவதும், தினமும், ஏராளமான, பாலியல் பலாத்கார கொடுமைகள் நடந்த வண்ணமாக உள்ளன. அவற்றைத் தடுக்க, சரியான சட்டங்கள், தண்டனை இல்லாததால், இந்தக் கொடுமை, அதிகரித்த வண்ணமாக உள்ளது.புனே நகரில் உள்ள, 'இன்போசிஸ்' நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றும், பண்டிதர் சிவகுமார் பெருமாள், 37, என்ற தமிழர், பெண்களை பாதுகாக்க வலியுறுத்தி, நாட்டின் முதல் குடிமகன், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதிய வண்ணமாக உள்ளார்.கடந்த ஏப்ரலில் துவங்கிய அவரின், 'கடிதப்போர்' இன்னமும் தொடர்கிறது. தன் கடிதத்தில், அன்றாடம் நிகழும், பாலியல் பலாத்கார சம்பவங்களை விவரித்து, தடுக்காத போலீஸ் மற்றும் அதிகாரிகளையும், சில சமயங்களில் தடுக்கப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்களையும் விவரிக்கிறார்.
ஏழு மாதங்களாக அவர் தொடர்ந்து, தபால் அட்டையில், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி வந்த போதிலும், ஒரு நாள் கூட, 'கடிதம் கிடைத்தது' என, ஜனாதிபதி அலுவலகத்திடம் இருந்து, அவருக்கு பதில் வரவேயில்லை.
இது குறித்து, ஜனாதிபதியின் பத்திரிகை தொடர்பாளர், வேணு ராஜாமணியிடம் கேட்ட போது, ''அப்படியா, எனக்குத் தெரியாதே! விசாரிக்கிறேன்,'' என்றார்.

No comments:

Post a Comment