விவாதம் என்பது எந்த உண்மையையும் நிலை நிறுத்தாது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 27, 2014

விவாதம் என்பது எந்த உண்மையையும் நிலை நிறுத்தாது.

விவாதம் என்பது எந்த உண்மையையும் நிலை நிறுத்தாது என்பது ஜென் மார்க்க தத்துவம்.”
இதுக்கு ஒரு கதை இருக்கு...
ஒரு அரசன் ஜென் குருவை காண வந்தான்.
அவர்கள் இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து உரையாட தொடங்கினர்.
அரசன் கேட்டான்.
குருவே ஜென் என்பது இயல்பாய் இருத்தல் என்பது தான் இல்லையா ?
அதற்கு மெளனமாக தலையசைத்தார் குரு.
இயல்பு என்பது மனதை பொறுத்த விசயம்
இல்லையா ?
மன்னன் அடுத்த கேள்வியையும் குரு முன் வைத்தான்.

அதற்கும் தலையசைப்பே பதிலாக இருந்தது குருவிடம்.
அப்படியானால் ஜென் மார்க்க உபதேசத்தின் படி மனமே புத்தர் இல்லையா ? மூன்றாவது கேள்வியையும் முன் வைத்தான் மன்னன்.
” நான் இதற்கு இல்லை என்று பதில் சொன்னால் உலகமே அறிந்த உண்மையை நான் மறுப்பதாகிவிடும். ஆம் என்று சொன்னால் தெரியாத விசயத்தை தெரிந்து கொண்டதாக நினைப்பீர்கள் “ என்றார் குரு.
உங்களை போன்ற ஞானிகளும் மரணத்தை தவிர்க்க முடியதல்லவா ? மன்னன் விடுவதாக இல்லை.
ஆமாம் என்றார் குரு.
அப்படியெனில் செத்த பிறகு எங்கே செல்வீர்கள் ? இது மன்னனிடம் உள்ள விடையறியா கேள்வி.
தெரியாது என்றார் குரு.
தெரியாதா ? எல்லாம் அறிந்த குரு நீங்கள் உங்களுக்கு தெரியாதா ? மன்னன் விடையறியாமல் போன விரக்தியுடன் கேட்டான்.
ஆமாம், எனக்கு தெரியாது. ஏனென்றால் நான் இன்னும் செத்ததில்லை. என்று கூறிவிட்டு எழுந்து நடந்தார் குரு.
# விவாதம் என்பது எந்த உண்மையையும் நிலை நிறுத்தாது என்பது ஜென் மார்க்க தத்துவம்.

No comments:

Post a Comment