அங்கன்வாடிகளின் செயல்பாடு குறித்து கருத்தளிக்க ஆலோசனை பெட்டிகள்: அரசு உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 27, 2014

அங்கன்வாடிகளின் செயல்பாடு குறித்து கருத்தளிக்க ஆலோசனை பெட்டிகள்: அரசு உத்தரவு

அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில், ஆலோசனை பெட்டிகளை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் சமூக நிலையை மேம்படுத்தும்
நோக்கத்தில், இத்திட்டத்தின் மூலம், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் இணை உணவு வழங்கப்படுகிறது.
குழந்தைகளின் எடையை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிட ஏதுவாக, நவீன எடை பார்க்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் நலனுக்கான இத்திட்ட செயல்பாடுகள் குறித்து, மக்கள் ஆலோசனை அல்லது புகார் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு குழந்தைகள் மையத்திலும், ஆலோசனை பெட்டி வைக்கப்பட உள்ளது. மையங்களின் செயல்பாடுகள் குறித்து, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோதி சுசீலா கூறியதாவது: அனைத்து மையங்களிலும் ஆலோசனை பெட்டி வைக்க, அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பெட்டிகள் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளோம்.
விரைவில், அங்கன்வாடி மையங்களில் ஆலோசனை பெட்டிகள் பொருத்தப்படும். மாதம் ஒருமுறை பெட்டியில் உள்ள பொதுமக்களின் கடிதங்களை எடுத்து படித்து, அறிக்கையாக தயாரித்து சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment