ஞாபகம் என்றால் என்ன? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 28, 2014

ஞாபகம் என்றால் என்ன?

நம் மூளையில் தேக்கிவைத்திருக்கிற விஷயங்களைத் தேவைப்படும்போது வெளியே எடுத்து, தகுந்த நேரத்தில் அதை உபயோகப்படுத்துவது. ஒன்றை மறந்துவிடும்போது மூளை ஒரு கம்ப்யூட்டர்போல வேலை செய்கிறது.  தொலைந்ததைத் தேடும் பணிதான் அது.
               ஞாபக மறதிக்கு என்ன காரணம்? அவசர யுகத்தில் வேகம் வேகம். எதையும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செய்யும்போது
 மறதி என்பது இயல்பான விஷயமாக மாறிப்போய்விடுகிறது. 

நாம் ஏன் சில விஷயங்களை மறக்கிறோம்? நம் மூளை என்பது ஒரு சின்ன ஹார்டு டிஸ்க் மாதிரி. ஏற்கெனவே அது பல நினைவுகளை ஸ்டோர் பண்ணி வைத்திருக்கும்போது, புதிதாகச் சென்றடைகிற விஷயங்கள் சிறிது இடத்தை ஆக்கிரமிக்கும். இப்படி ஒவ்வொரு விஷயமாக நினைவில் பதியும்போது, பழைய விஷயங்கள் புதியவைக்கு இடம்விட்டு தானாகவே காணாமல்போய்விடும். இயற்கையாக நடக்கும் இந்த விஷயங்கள் கடவுள் நமக்குத் தந்த வரப்பிரசாதம். 

ஒரு விஷயம் நம் மூளையில் நிலையாக வைத்திருக்க வேண்டுமென்றால் அந்த விஷயம் நமக்குத் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். புரியாத விஷயங்கள் நம் மூளையில் பதிவதில்லை. 

பல விஷயங்களை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், நம்மைச் சுற்றி நல்லவர்களும், நல்ல இயற்கை சூழலும் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment