தமிழக அரசின் கடன் எவ்வளவு? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, November 30, 2014

தமிழக அரசின் கடன் எவ்வளவு?


 தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் பெற்ற கடன் தொகை விபரம் தெரியவந்துள்ளது.
                      தமிழகஅரசு 2013 ஏப்ரல் முதல் 2014 செப்டம்பர் வரை பெற்ற கடன்கள் குறித்து, தகவல் உரிமைச்சட்டம் மூலமாக கேட்கப்பட்ட தகவல்களுக்கு நிதித்துறை பொதுத்தகவல் அதிகாரி ராஜா தெரிவித்த தகவல்கள்; மத்திய அரசு மூலமாக உலகவங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களிடமிருந்து தமிழகஅரசு ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 வரை பெற்ற கடன் ரூ.இரண்டாயிரத்து 11 கோடியே 33 லட்சத்து 84 ரூபாய். இவற்றிடம் இருந்து 2014 ஏப்ரல் முதல் 2014 செப்டம்பர் வரை பெற்ற கடன் ரூ.825 கோடியே 39 லட்சத்து 57 ஆயிரம். நபார்டு வங்கி மூலம் தமிழகஅரசு 2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை பெற்ற கடன் ரூ.ஆயிரத்து 410 கோடியே 78 லட்சத்து 32 ஆயிரத்து 400.
               இதே வங்கி மூலம் 2014 ஏப்ரல் முதல் 2014 செப்டம்பர் வரை பெற்ற கடன் ரூ. 526 கோடியே 24 லட்சத்து 34 ஆயிரத்து 200. ரிசர்வ் வங்கி மூலம் பொதுமக்களிடம் இருந்து பெற்ற கடன் ரூ.இருபதாயிரத்து 749 கோடியே 15 லட்சம். இதே போல 2014 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பெற்ற கடன் ரூ. பதினோராயிரத்து 375 கோடி. நிதி நிறுவனங்கள் வாயிலாக மூலம் தமிழகஅரசு 2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை பெற்ற கடன் ரூ.120 கோடியே 99 லட்சத்து 73 ஆயிரம். 2014 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பெற்ற கடன் குறித்த கணக்கு இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment