தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தை சேர்ந்த முத்துகுமார், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:–
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் படித்து வருகின்றேன். என்னுடைய பெற்றோர் இறந்து விட்டதால், என் மூத்த சகோதரனும், அக்காள் கணவரும் என்னை படிக்க வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் கேட்டு கடந்த 2013–ம் ஆண்டு விண்ணப்பம் செய்தேன். என் விண்ணப்பத்தை வங்கி மேலாளர் பரிசீலிக்கவில்லை. இதையடுத்து மாவட்ட கலெக்டர் முதல்
முதல்அமைச்சர் தனிப்பிரிவு வரை புகார் செய்தேன். பின்னர் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
என் மனுவை விசாரித்த இந்த ஐகோர்ட்டு கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 1–ந் தேதி பிறப்பித்த உத்தரவில், என்னுடைய விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலித்து, 15 நாட்களுக்குள் தகுந்த உத்தரவினை வங்கி மேலாளர் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தர விட்டது. இதன்பின்னரும், என் மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, இந்த ஐகோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே அவமதித்துள்ள காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் சிதம்பரம் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் வி.மோகன், மனுதாரர் தேவையான முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அந்த ஆவணங்களை கொடுத்தால், அவருக்கு கடன் தொகையை வழங்க வங்கி நிர்வாகம் தயாராக உள்ளது’ என்று வாதிட்டார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ், மனுதாரர் தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுத்து விட்டார்’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வங்கி நிர்வாகம் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் மனுதாரர் உடனடியாக கொடுக்க வேண்டும். அந்த ஆவணங்களை பெற்றுக் கொண்டு, 5 நாட்களுக்குள் மனுதாரருக்கு கல்விக் கடன் தொகையை வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கியபின்னர், அதுதொடர்பான அறிக்கையை வருகிற (ஜனவரி) 6ந் தேதி இந்த கோர்ட்டில் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment