எப்படி இருந்த நான்.................. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 1, 2015

எப்படி இருந்த நான்..................

20 வருடங்கள் முன்பெல்லாம் தொலைபேசி வைத்திருந்தால் அவர்தான் ஊரிலேயே பெரிய பண்ணையார் என்று மதிக்கத்தக்க அளவுக்கு இருப்பார். ஊரில் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமானாலும் அந்த நபர் வீட்டுக்குதான் போன் வரும்.

பிறகு செல்போன்கள் வருகை தந்தன. ஆனால் சிவப்பும், பச்சையும் மட்டுமே கொண்ட பட்டன்களுடன், செங்கல் சைசில் அவை இருந்தன. அதிலும் கலர் கிடையாது, பிளாக்&ஒயிட்டுதான். அதன்பிறகு கலர் டிஸ்பிளே கொண்ட செல்போன்கள் வந்தன. பின்னர் அதில் 2ஜி இன்டர்நெட் சேவை புகுத்தப்பட்டது. இணையம் புகுந்த பிறகு நிலைமை படுவேகமாக முன்னேறியது. 3ஜி, 4ஜி என இணைய வேகம் அதிகரிக்க, அதிகரிக்க, கையடக்க கம்ப்யூட்டராகவே மாறியது செல்போன். இன்று ஸ்மார்ட் போன் இல்லாத மனிதர்களை மதிக்காத உலகில் வாழ்ந்து கொண்டுள்ளோம். இதைத்தான் இந்த படம் காண்பிக்கிறது.

No comments:

Post a Comment