தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 5, 2015

தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை


தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் ஜெனார்த்தனன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, ஊதிய குறை தீர் பிரிவின் பரிந்துரையை ஏற்று 2013ம் ஆண்டு தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு சாதாரண நிலை தர ஊதியத்தை திருத்தி அமைத்து உத்தரவிட்டது. 

            ஆனால் கடந்த 1978-1979ம் ஆண்டு முதல், ஒரே பணித்தொகுப்பில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழில் கல்வி ஆசிரியர்கள் நிலை மிகவும் வேதனையாக உள்ளது. பட்டதாரி பணி நிலையில் உள்ள தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே நிதித் துறைசெயலாளரின் 22.8.2014ம் தேதி கடிதத்தை திருத்தம் செய்து, பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வரும் தொழில் கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை தர ஊதியம் குறித்து தெளிவுரை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment