அப்துல் கலாமின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு: 6 லட்சம் அச்சிட்டு சாதனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 16, 2015

அப்துல் கலாமின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு: 6 லட்சம் அச்சிட்டு சாதனை

அப்துல் கலாமின் பன்முகத் தன்மையை நினைவு கூரும் வகையிலான சிறப்பு அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கடந்த ஜூலை 27-இல் உயிரிழந்தார். இவரின் நினைவாக, 4 அஞ்சல் தலைகள் வெளியிட அஞ்சல் துறை இயக்குநரகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, சென்னை அண்ணா சாலையிலுள்ள அஞ்சல் தலை சேகரிப்பு சேமிப்பு மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், இவற்றை தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் சார்லஸ் லோபோ வெளியிட்டார். அப்போது, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலக்சாண்டர் பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து சார்லஸ் லோபோ நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை தவிர, கோவை, திருச்சி, மதுரை, உதகை ஆகிய இடங்களிலுள்ள அஞ்சல் தலை சேகரிப்பு சேமிப்பு (philatelic bureau) மையங்களிலும், சிறப்பு அஞ்சல் தலைகள், அஞ்சல் உறை வெளியிடப்பட்டன. கலாம் பிறந்த ஊரான ராமேசுவரத்தில், முத்திரையிடப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறியதாவது:
கலாமின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், ரூ. 5 மதிப்பிலான அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 6 லட்சம் அஞ்சல் தலைகள், "ஹைதராபாத் செக்யூரிட்டி பிரஸ்' இல் அச்சடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களில் (Multi color) அச்சிடப்பட்டுள்ளன. அனைத்து அஞ்சல் தலை சேகரிப்பு சேமிப்பு மையத்திலும், பிரதான அஞ்சலகங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்றார்.

No comments:

Post a Comment